என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவின் மேட்ச் வின்னர் அஸ்வின்- புகழாரம் சூட்டிய இந்திய வீரர்கள்

- நீங்கள் எண்ணற்ற சந்தோஷங்களையும் பெருமையையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளீர்கள்.
- இந்திய அணியின் லெஜெண்டாக எப்போதும் நீங்கள் நினைவு கூரப்படுவீர்கள்.
இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அவரது ஓய்வுக்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அஸ்வின் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-
பெர்த் டெஸ்டின்போதே அஷ்வினின் ஓய்வு குறித்து நான் அறிந்து கொண்டேன். பிங்க் பால் டெஸ்ட் வரையாவது விளையாடுமாறு கேட்டு கொண்டேன். இந்தியா இதுவரையில் பார்க்காத ஒரு மேட்ச் வின்னர் அஸ்வின் என கூறினார்.
விராட் கோலி கூறியதாவது:-
நான் உங்களுடன் 14 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். ஓய்வை அறிவிக்கப்போகிறேன் என நீங்கள் இன்று என்னிடம் சொன்னபோது உணர்ச்சிவப்பட்டு, நாம் சேர்ந்து விளையாடிய நாட்களை நினைவு கூர்ந்தேன். இந்திய அணியின் வெற்றிகளுக்கு நீங்கள் செய்த பங்கு, உங்கள் கிரிக்கெட் திறனுக்கு ஈடு இணையே இல்லை. இந்திய அணியின் லெஜெண்டாக எப்போதும் நீங்கள் நினைவு கூரப்படுவீர்கள் என கூறினார்.
கவுதம் கம்பீர் கூறியதாவது:-
ஒரு இளம் பந்துவீச்சாளராக இருந்து, நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நீங்கள் வளர்ந்ததை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. அடுத்த தலைமுறை பவுலர்கள் "அஸ்வினால்தான் நான் பவுலர் ஆனேன்" என சொல்வார்கள் என்பது எனக்கு தெரியும். உன்னை மிஸ் பண்ணுவேன் தம்பி என கூறினார்.
சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-
கிரிக்கெட் பந்தை வைத்து நீங்கள் செய்யும் அற்புதங்களும், தெளிவான சிந்தனையும், டெஸ்ட் கிரிக்கெட் மீதான அபரீத அன்பும் என்றும் எங்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கும். நீங்கள் எண்ணற்ற சந்தோஷங்களையும் பெருமையையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளீர்கள். அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள் என கூறினார்.
தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
சிறந்த விளையாட்டை சிறப்பாக விளையாடினீர்கள். உங்களுடன் விளையாடிதில் பெருமையடைகிறேன். நிச்சயமாக தமிழ்நாடு வீரர்களுள் மிகச் சிறந்தவர் என கூறினார்.