search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சிட்னி டெஸ்ட்: 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா
    X

    சிட்னி டெஸ்ட்: 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா

    • இந்திய அணி ஆஸ்திரேலியா வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
    • பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறைந்த இலக்கு மற்றும் இரண்டு நாட்கள் முழுமையாக இருப்பதால் அந்த அணி எடுத்ததவும் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை.

    மறுப்பக்கம் இந்திய அணி பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்பு காட்டியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவெளிக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களை எதிர்கொண்டு விளையாடியது. இந்தியா சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினர்.

    ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான சாம் கோன்ஸ்டாஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 6 ரன்களுக்கும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்றைய ஆட்ட நேரம் முடிய இன்னும் 65 ஓவர்களுக்கும் மேல் இருப்பதால், உணவு இடைவெளிக்கு பிறகும் இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வெற்றி பெற முனைப்பு காட்டும் என்று தெரிகிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 91 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×