என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சேப்பாக்கம் டெஸ்ட்: ஜெய்ஸ்வால்- ரிஷப் பண்ட் பொறுப்பான ஆட்டம்: உணவு இடைவேளையின்போது இந்தியா 88/3
- இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
- ஜெய்ஸ்வால்- ரிஷப் பண்ட் ஜோடி 54 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.
இவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சுமார் இரண்டு வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் முதலில் திணறினார். அதன்பின் சுதாரித்து விளையாட ஆரம்பித்தார்.
மறுமுனையில் ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்த ஜோடி விக்கெட் இழக்காமல பார்த்துக் கொண்டது. இவர்களின் நிதானமான மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் வங்கதேச அணியால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது.
இதனால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 37 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.