என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஹர்ஷித் ராணாவுக்கு வந்த சோதனை - அறிமுக போட்டியில் இப்படியொரு சாதனையா?
- இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
- ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. டி20 தொடரை போன்றே ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
நேற்றைய முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய ஒருநாள் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா அறிமுகமாகினர். இந்த நிலையில், அறிமுக போட்டியிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணி பேட்டிங்கின் போது ஹர்ஷித் ராணா வீசிய ஒரே ஓவரில் 26 ரன்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் அறிமுக போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.
இது ஒருபக்கம் இருந்த போதிலும், நேற்றைய போட்டியில் ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற் சாதனையையும் ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.