என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/9000084-ive1.webp)
முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.
- சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன் நடக்கும் ஒருநாள் தொடர்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/9000387-whatsappimage2025-02-06at11606pm.webp)
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். எனினும் முதல் ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி விளையாடவில்லை.
இது தவிர இன்றைய போட்டியின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகி உள்ளனர்.
சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பதால், இந்த தொடரை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.