என் மலர்
கிரிக்கெட் (Cricket)
நாக்பூரில் நாளை நடக்கும் முதல் ஒருநாள் போட்டி - வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
- டி20 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, துருவ் ஜூரல், சிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை.
மாறாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர் .
ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி ஆகிய 7 வீரர்கள் மட்டுமே இரண்டு அணியிலும் உள்ளனர்.
டி20 தொடரை ஏற்கனவே இங்கிலாந்து அணி இழந்துள்ள நிலையில், ஒருநாள் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.
? Nagpur
— BCCI (@BCCI) February 5, 2025
Gearing up for the #INDvENG ODI series opener..
..in Ro-Ko style ?#TeamIndia | @IDFCFIRSTBank | @ImRo45 | @imVkohli pic.twitter.com/gR2An4tTk0