என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9112834-ive.webp)
X
2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
By
மாலை மலர்9 Feb 2025 1:05 PM IST (Updated: 9 Feb 2025 1:28 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துவக்க வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியின் மூலம் வருண் சக்கரவர்த்தி இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகிறார்.
Next Story
×
X