என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![2வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 2வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9105504-ind.webp)
2வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் தொடங்கியது.
- கட்டாக்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் தொடங்கியது.
இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி இந்தியாவில் வைத்து இந்திய அணியை ஐந்து முறை மட்டுமே வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 31 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.