search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஹர்ஷித் ராணா, ஜடேஜா அசத்தல்- இங்கிலாந்து 248 ரன்களில் ஆல் அவுட்
    X

    ஹர்ஷித் ராணா, ஜடேஜா அசத்தல்- இங்கிலாந்து 248 ரன்களில் ஆல் அவுட்

    • இங்கிலாந்து தரப்பில் பட்லர், பேத்தேல் அரை சதம் அடித்தனர்.
    • இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட்- பென் டக்கெட் களமிறங்கினர். சால்ட் அதிரடியாக விளையாடி ரனகளை குவித்தார்.

    அவர் 26 பந்தில் 43 எடுத்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் டக்கெட் 32 ரன்னில் ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஹாரி ப்ரூக் டக் அவுட்டில் வெளியேறினார். இதனை தொடர்ந்து 14 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜோரூட் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனை தொடர்ந்து கேப்டன் பட்லர் மற்றும் ஜேக்கப் பேத்தேல் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்லர் 52 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 5, பிரைடன் கார்ஸ் 10 என வெளியேறினர்.

    ஒரு முனையில் விக்கெட்டுகளும் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஜேக்கப் அரை சதம் கடந்தார். அவர் 51 ரன்களில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Next Story
    ×