search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி டி20 போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்றிரவு  பலப்பரீட்சை
    X

    கடைசி டி20 போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் டி20 தொடரில் விளையாடுகின்றன.
    • இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மேலும், 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது.

    இரு அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டியில் 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறிய இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே அரைசதம் அடித்து அசத்தினர். மேலும், ரிங்கு சிங், அபிஷேக் ஷர்மாவின் கணிசமான பங்களிப்பால் இந்திய அணி சவாலான ஸ்கோரை (181) எட்டியது.

    பந்து வீச்சில் சிவம் துபேவுக்கு பதிலாக மாற்று வீரராக வந்த ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் தலா மூன்று விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.

    இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்று விட்ட நிலையில், கடைசி போட்டியிலும் தனது ஆதிக்கத்தை நீட்டிக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    Next Story
    ×