search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பெர்த் டெஸ்ட்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 84/0; 130 ரன் முன்னிலை
    X

    பெர்த் டெஸ்ட்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 84/0; 130 ரன் முன்னிலை

    • ஜெய்ஸ்வால் 42 ரன்கள் எடுத்துள்ளார்.
    • கே.எல். ராகுல் 34 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனதும் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். கே.எல். ராகுலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் தொடக்க ஜோடியை பிரிக்க சிரமமப்பட்டனர்.

    ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோருடன் நாதன் லயனும் பந்து வீசி எந்த பயனும் இல்லை. மதியம் தேநீர் இடைவேளை வரை ஜெய்ஸ்வால்- கே.எல்.ராகுல் ஜோடி விக்கெட் இழக்கவில்லை.

    தேநீர் இடைவேளை வரை இந்தியா 26 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 88 பந்தில் 42 ரன்கள் அடித்தும், கே.எல். ராகுல் 70 பந்தில் 34 ரன்கள் அடித்தும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 130 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    Next Story
    ×