search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சென்னை சேப்பாக்கம் டெஸ்ட்: ரோகித் சர்மா, கில், விராட் கோலி அடுத்தடுத்து அவுட்
    X

    சென்னை சேப்பாக்கம் டெஸ்ட்: ரோகித் சர்மா, கில், விராட் கோலி அடுத்தடுத்து அவுட்

    • விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தலா 6 ரன்னில் அவுட். கில் டக்அவுட்.
    • ராணா முகமது 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. வானம் மேகமூட்டமாக இருந்ததால் வங்கதேச அணி கேப்டன் ஷன்டோ பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் 3 ஓவரில் இந்தியா 4 ரன்கள் எடுத்தது.

    4-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் 6-வது ஓவரில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 6-வது ஓவரை ஹசன் முகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 14 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது.

    அடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். 8-வது ஓவரின் 3-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் 8 பந்துகளை சந்தித்த நிலையில் டக்அவுட் ஆகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

    விராட் கோலியாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஹசன் முகமது வீசிய போட்டியின் 10-வது ஓவரில் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 6 பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது திணறி வருகிறது.

    10.30 மணி நிலவரப்படி இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 3 விக்கெட்டுகளையும் ஹசன் முகமது வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×