search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2025 ஐ.பி.எல். சீசனுக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ்

    • ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.
    • இந்த முறை மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.

    18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் பத்து அணிகள் கோப்பைக்காக விளையாடுகின்றன. இந்த முறை அணிகளிடையே 74 போட்டிகள் இந்தியா முழுக்க 13 நகரங்களில் நடைபெற இருக்கிறது.

    ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில காலமே எஞ்சியுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கு தயாராகும் பணிகளில் மும்முரமாக ஈடுபட துவங்கியுள்ளன. அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2025 ஐ.பி.எல். தொடருக்கான ஜெர்சியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    நீலம் மற்றும் தங்க நிறங்களை கொண்டிருக்கும் புதிய ஜெர்சி அணிந்தபடி வீரர்கள் காட்சியளிக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வீரர்கள் புதிய ஜெர்சியில் இருப்பதோடு, மும்பை அணியின் கொடி மற்றும் கிட் உள்ளிட்டவையும் காண்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×