என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஐபிஎல் மைதானங்கள்: மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ பிறப்பித்த அதிரடி உத்தரவு
- ஐபிஎல் 2025 சீசன் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்குகிறது.
- மைதானங்களை அணிகள் மற்ற நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
ஐபில் 2025 சீசன் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்குகிறது. 21-ந்தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடருக்கான முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் பல மைதானங்களில் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ ஒரு வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல் அணிகள் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் மைதானங்களை எந்தவிதமான மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
பவுண்டரி லைன் அருகே நிகழ்ச்சி நடத்தப்படலாம். அப்படி நடத்தும்போது மைதானம் போட்டி நடத்துவதற்கு ஏற்ப தரத்தில் இருப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற காரணத்தினால் பிசிசிஐ இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 10 அணிகளும் குறிப்பிட்ட மைதானங்களை தங்களுடைய சொந்த மைதானங்களை கருதும். சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன கார்டன் மைதானத்தையும் சொந்த மைதானங்களாக கொண்டு விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.