என் மலர்
ஐ.பி.எல்.

X
CSK Vs MI அணிகள் மோதும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் - ஏன் தெரியுமா?
By
மாலை மலர்16 Feb 2025 9:13 PM IST

- மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளது
- மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சென்னை, மும்பை அணிகள் மோதும் முதல் போட்டியில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனில் மும்பை அணி 3 போட்டிகளில் மெதுவாக பந்து வீசயதற்காக ஹர்திக் பாண்ட்யாவிற்கு 30 லட்சம் அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X