என் மலர்
ஐ.பி.எல்.

ஐ.பி.எல். 2025: முதல் பாதி ஆட்டங்களை இழக்கும் கேஎல் ராகுல், மயங்க் யாதவ்?

- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லோகேஷ் ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது.
- மயங்க் யாதவை லக்னோ அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது.
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த நவம்பர் மாதம் நடந்த ஏலத்தில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான லோகேஷ் ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது.
இந்நிலையில் அவர் இந்த ஐபிஎல் தொடரின் முதல் சில பாதிகளை தவரவிட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ராகுல் மனைவிக்கு இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் முதல் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசவ சமயத்தில் மனைவியை அருகில் இருந்து கவனிக்க விரும்பும் லோகேஷ் ராகுல் ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது.
இதேபோல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அகாடமியில் காயத்தில் இருந்து மீளுவதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.
அவர் எப்போது முழு உடல் தகுதியை எட்டுவார் என்பது தெரியவில்லை. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளது. மயங்க் யாதவை லக்னோ அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.