என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கராச்சி மைதானத்தில் இந்திய கொடி மிஸ்ஸிங்.. விளக்கம் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

- ஐசிசி தொடரில் ஒவ்வொரு அணியின் தேசியக்கொடியும் மைதானத்தில் பறக்க விடப்படுவது வழக்கமான ஒன்று.
- பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 19-ந் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்க தேசத்தை வருகிற 20-ந் தேதி சந்திக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் ஏழு நாடுகளின் கொடி மட்டும்தான் பறக்க விடப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் தேசியக்கொடி இல்லை. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி, பாகிஸ்தானில் வந்து விளையாடும் நாடுகளின் கொடிகள் மட்டும் தான் பறக்க விடப்பட்டிருப்பதாகவும், இந்தியா தங்களது நாட்டுக்கு வரவில்லை என்பதால் தான் இந்திய நாட்டின் தேசிய கொடியை தாங்கள் வைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளனர்.
ஏற்கனவே பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தானும் இந்தியாவின் தேசிய கொடியை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.