search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம்- மவுனம் கலைத்த ரகானே
    X

    இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம்- மவுனம் கலைத்த ரகானே

    • ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன்.
    • நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.

    இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேலும் தேர்வு குழு தலைவர் அகர்கர் பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார்.

    இது குறித்து ரகானே கூறியதாவது:-

    சில வருடங்களுக்கு முன்பு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டேன். பின்பு சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். இறுதிப் போட்டியில் நான் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தேன். இருந்த போதும் நான் மீண்டும் ஏன் நீக்கப்பட்டேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன். எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. என்னை ஏன் நீக்கி விட்டீர்கள் என்று போய் கேட்கும் நபர் நான் கிடையாது.

    மேலும் இது குறித்து நான் பேச வேண்டும் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் பேசுவதற்கு தயாராக இருந்தால்தான் முடியும். அப்படி யாரும் என்னிடம் பேச தயாராக இல்லை. என் கையில் என்ன இருக்கிறதோ அதைப்பற்றி மட்டுமே நான் பார்க்கிறேன். மீண்டும் வருவதற்கு நான் கடுமையாக உழைக்கிறேன்.

    எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும் ஆர்வமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது நான் ரஞ்சி தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறேன். மும்பை அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.

    என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை என்னுடைய விளம்பரத்திற்கு பிஆர் வைத்துக்கொள்ள சொன்னார்கள். நான் அடிக்கடி செய்திகளில் இடம் பெற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கான விளம்பரம் என்னுடைய பேட்டிங் மட்டும்தான். நான் அப்படி யாரையும் என் தனிப்பட்ட விளம்பரத்திற்கு வைத்துக் கொள்ளவில்லை.

    என்று ரகானே கூறினார்.

    Next Story
    ×