என் மலர்
ஐ.பி.எல்.

மகளிர் பிரீமியர் லீக்: 2-வது வெற்றி யாருக்கு? டெல்லி-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

- இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
- பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வதோதரா:
3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் போதுகின்றன.
இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அந்த அணி 202 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. டெல்லி அணி முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த அணி கடைசி பந்தில் இந்த வெற்றியை பெற்றது.
இதனால் பெங்களூர்-டெல்லி அணிகள் மோதும் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளிலும் திறமை வாய்ந்த வீராங்கனைகள் இருக்கிறார்கள்.