என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 சாதனைகளை படைத்த ஜடேஜா

- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இந்தியா- இங்கிலாந்து போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 3 சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 6000-க்கு கூடுதலான ரன்களும் பந்து வீச்சில் 600 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜடேஜா இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 6-வது வீரராக உள்ளார்.
முதல் 5 வீரர்களில் கபில்தேவ் (இந்தியா), வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்), ஷான் பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா), டேனியல் வெக்டோரி (நியூசிலாந்து), ஷகீப் அல்ஹசன் (வங்கதேசம்), ஜடேஜா (இந்தியா) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.
மேலும் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலிலும் முதல் இந்தியராக ஜடேஜா இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் சானத் ஜெயசூர்யா 323 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
2-வது இடம் முதல் 5-வது இடங்கள் முறையே ஷகீப் அல்ஹசன் (317), டேனியல் விக்டோரி (305), ஜடேஜா (222), அப்துர் ரசாக் (207) ஆகியோர் உள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா இடையேயான போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்
ஜடேஜா (42 விக்கெட்டுகள்)
ஜேம்ஸ் ஆண்டர்சன் (40 விக்கெட்டுகள்)
ஆண்ட்ரூ பிளின்டாப் (37 விக்கெட்டுகள்)
ஹர்பஜன் சிங் (36 விக்கெட்டுகள்)
ஸ்ரீநாத், அஸ்வின் (35 விக்கெட்டுகள்)