என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் பும்ரா- வெளியான தகவல்
- பும்ரா தேர்வு அவரது உடற்தகுதியைப் பொறுத்தது.
- சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை:
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த தொடருக்கான அணிகளை அறிவிக்க கடந்த 12-ம் தேக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருந்தது. ஆனால், இந்திய அணியை அறிவிக்க ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது. அதன்படி இன்று இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது காயமடைந்த பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பினும், அவரது தேர்வு அவரது உடற்தகுதியைப் பொறுத்தது, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குறைந்தபட்சம் ஒரு ஒருநாள் போட்டியில் அவர் இடம்பெறுவதை தேர்வுக் குழு ஆர்வமாக உள்ளது.