search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3 கேப்டன்கள் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த பும்ரா
    X

    3 கேப்டன்கள் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த பும்ரா

    • பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர்.
    • விராட் கோலி எனர்ஜியால் வழி நடத்தப்படக்கூடிய ஆர்வம் மிகுந்தவர்.

    ஜஸ்ப்ரிட் பும்ரா உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

    கடந்த 2016-ம் ஆண்டு டோனி தலைமையில் ஜஸ்ப்ரிட் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பின் 2017 - 2021 வரை விராட் கோலி தலைமையில் அவர் அதிகமாக வளர்ந்தார். தற்போது ரோகித் சர்மா தலைமையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர் என பும்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர். அவர் வீரர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு ஒரு வீரர் என்ன செய்கிறார் என்பதை அறிந்து செயல்படுவார். ரோகித் சர்மா மிகவும் கடுமையானவர் அல்ல. அவர் பவுலர்களின் கருத்துக்களை கேட்க திறந்த மனதுடன் தயாராக இருப்பார்.

    எம்எஸ் டோனி எனக்கு வேகமாக நிறைய பாதுகாப்பும் ஆதரவும் கொடுத்தார். அவர் எப்போதும் தன்னுடைய உள்ளுணர்வுகள் மீது அதிக தன்னம்பிக்கை வைப்பார். டோனி எப்போதும் அதிகமாக திட்டமிடுதலை நம்ப மாட்டார்.

    விராட் கோலி எனர்ஜியால் வழி நடத்தப்படக்கூடிய ஆர்வம் மிகுந்தவர். அவர் எப்போதும் தனது இதயத்தை ஜெர்ஸியில் வைத்து விளையாடுவார். அவர் எங்களை ஃபிட்னஸ் விஷயத்தில் மாற்றினார். கேப்டனாக இல்லையென்றாலும் விராட் கோலி இப்போதும் தலைவராக இருக்கிறார். கேப்டன் என்பது ஒரு பதவி மட்டுமே. ஏனெனில் ஒரு அணியை 11 பேர் தான் நடத்துகின்றனர்.

    இவ்வாறு பும்ரா கூறினார்.

    Next Story
    ×