search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி 10 இன்னிங்ஸ்: 20 ரன்களை கூட எடுக்க முடியாமல் தடுமாறும் ரோகித்.. தொடரும் மோசமான பேட்டிங்
    X

    கடைசி 10 இன்னிங்ஸ்: 20 ரன்களை கூட எடுக்க முடியாமல் தடுமாறும் ரோகித்.. தொடரும் மோசமான பேட்டிங்

    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த பல தொடர்களாகவே பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை சந்தித்து வருகிறார். இது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த பல்வேறு தொடர்களில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த ரோகித் இந்த இங்கிலாந்து தொடரிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    மோசமான ஆட்டத்தை தொடரும் பட்சத்திலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் கைப்பற்றவில்லை என்றாலும் இந்திய அணியில் இருந்தும் நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இருந்தாலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தது அனைவரது மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 91 ரன்கள் மட்டுமே அடித்த அவர் ஆஸ்திரேலிய தொடரின் போது ஒட்டுமொத்தமாகவே 31 ரன்கள் மட்டுமே அடித்து மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    கடைசியாக அவர் விளையாடிய பத்து இன்னிங்ஸ்களில் 0,8,18,1,3,6,10,3,9,2 என்று ஒருமுறை கூட 20 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டம் இழந்திருக்கிறார். இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரது இந்த மோசமான பேட்டிங் பார்ம் தொடர்ந்தால் அவர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×