என் மலர்
கிரிக்கெட் (Cricket)
VIDEO: காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்தது தொடர்பாக மனம் திறந்த முகமது சமி
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
- நீங்கள் காயமடைந்தால், மீண்டு வந்து அணிக்காகவும், நாட்டுக்காகவும் விளையாட வேண்டும்.
இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்த டி20 போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு முகமது சமி களம் இறங்கவுள்ளார். இதற்காக சமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்தது குறித்து முகமது சமி பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் பேசும் சமி, " நாம் சிறு பிள்ளையாக இருந்தபோது பெற்றோர் நமக்கு எப்படி நடக்க வேண்டும் என கற்றுத் தருவர். நாம் கீழே விழுவோம், மீண்டும் எழுவோம். ஆனால், நடக்க கற்றுக் கொள்வதை நிறுத்தவே மாட்டோம். அதேபோல தான் விளையாட்டிலும், நீங்கள் காயமடைந்தால், மீண்டு வந்து அணிக்காகவும், நாட்டுக்காகவும் விளையாட வேண்டும்.
எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியம். நீங்கள் ரன்கள் அடிக்கும்போதும் விக்கெட்டுகள் எடுக்கும்போதும் அனைவரும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் கடினமான காலங்களில் யார் நம்முடன் இருக்கிறார்கள் என்பதை உணர்வதே உண்மையான சோதனையாகும். கடந்த ஓராண்டாக காத்திருந்து கடினமாக உழைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
After testing times & a long wait, he is back to don the blues ?For Mohd. Shami, it's only "UP & UP" ?? from here onWATCH ?? #TeamIndia | #INDvENG | @MdShami11 | @IDFCFIRSTBank https://t.co/V03n61Yd6Y
— BCCI (@BCCI) January 22, 2025