என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஒரே ஓவரில் அதிக ரன்கள்.. 4-வது இந்திய வீரராக ஹர்ஷித் ராணா மோசமான சாதனை
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமாகி உள்ளார்.
- இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ரானா இடம்பிடித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலீப் சால்ட் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இறுதியில் இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி அவர் தனது 3-வது ஓவரில் 26 ரன்களைக் கொடுத்து, அறிமுக ஆட்டத்தில் ஒரே ஓவரில் அதிக ரன்களை கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
இருந்தாலும் பின்னர் கம்பேக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What a catch by #YashasviJaiswal #INDvsENG #TeamIndia #England #HarshitRana pic.twitter.com/RMpgt1LWz4
— Sabyasachi Bagchi ?? (পিকুর বাবা ) (@CamBabon) February 6, 2025
ஒருநாள் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்த இந்திய வீரர்கள்
30 - யுவராஜ் சிங் vs டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ் (இங்கிலாந்து), தி ஓவல், 2007
30 - இஷாந்த் சர்மா vs ஜேம்ஸ் ஃபால்க்னர் (ஆஸ்திரேலியா), மொஹாலி, 2014
28 - குர்னால் பாண்டியா vs பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), புனே, 2021
26 - ஹர்ஷித் ராணா vs பில் சால்ட் (இங்கிலாந்து), நாக்பூர், 2025*
26 - ரவி சாஸ்திரி vs மைக் கேட்டிங் (இங்கிலாந்து), ஜலந்தர், 1981