என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஐ.பி.எல். 2025: NETS-இல் பட்டையை கிளப்பிய எம்.எஸ். தோனி - புகைப்படம் வைரல்
- ஐ.பி.எல். 2025 தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்.
- தோனி ஓய்வை அறிவிப்பார் என்று கூறினர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்.
எம்.எஸ். தோனி பேட்டிங் பயிற்சி செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரோடு கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. பலரும் விரைவில் எம்.எஸ். தோனி ஓய்வை அறிவிப்பார் என்று கூறினர்.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதன் மூலம் எம்.எஸ். தோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது எம்.எஸ். தோனி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில், எம்.எஸ். தோனி ஐ.பி.எல். 2025 தொடருக்கான பயிற்சியை துவங்கி இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. மார்ச் மாதம் ஐ.பி.எல். தொடர் துவங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் வரவிருக்கும் சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.