என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஒரு இந்திய வீரர் கூட இல்லாத ஐ.சி.சி.-யின் 2024 ஒருநாள் அணி அறிவிப்பு
- இலங்கையை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் சிறந்த அணிகள் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆண்டுக்கான ஐ.சி.சி.-இன் ஒருநாள் அணி பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ள ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அணியில் இலங்கையை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளில் இருந்து தலா மூன்று பேரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
ஐ.சி.சி.-இன் 2024 ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு இலங்கை அணியின் சரித் அசலங்கா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் இலங்கை அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அசலங்கா 605 ரன்களை அடித்துள்ளார். இவரது சராசரி 50.2 ஆகும். இதில் ஒரு சதம், நான்கு அரைசதங்கள் அடங்கும்.
இலங்கை அணி மட்டும் கடந்த ஆண்டு 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 12 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் பாகிஸ்தான் அணி ஏழு போட்டிகளிலும், 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
2024 ஐ.சி.சி. ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணி பட்டியல்:
சரித் அசலங்கா (கேப்டன்) - இலங்கை
சயிம் ஆயுப் - பாகிஸ்தான்
ரஹ்மனுள்ளா குர்பாஸ் - ஆப்கானிஸ்தான்
பதும் நிசங்கா - இலங்கை
குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்) - இலங்கை
ஷெர்ஃபேன் ரூத்தர்ஃபோர்டு - வெஸ்ட் இண்டீஸ்
அசமதுல்லா ஓமர்சாய் - ஆப்கானிஸ்தான்
வனிந்து ஹசரங்கா - இலங்கை
ஷாஹீன் ஷா அப்ரிடி - பாகிஸ்தான்
ஹாரிஸ் ரவுஃப் - பாகிஸ்தான்
ஏ.எம். காசன்ஃபர் - ஆப்கானிஸ்தான்