என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ரோகித் சர்மா- கம்பீர் இடையே மோதலா? விளக்கம் அளித்த பிசிசிஐ
- காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை.
- பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலசினார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் கவுதம் காம்பீர்-கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடையேயும், காம்பீர்-தேர்வு குழு தலைவர் அகர்கர் இடையேயும் மோதல் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நிராகரித்துள்ளது. (பி.சி.சி.ஐ.)யின் துணைத்தலைவர் ராஜீவ சுக்லா இது தொடர்பாக கூறியதாவது:-
காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை. இது தொடர்பாக வெளியான தகவல் தவறானது. பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலசினார். விளையாடும் போது நல்ல நிலையில் இருப்பதும், மோசமாக இருப்பதும் நடப்பதுதான்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி வருகிற 18 அல்லது 19-ந்தேதி இறுதி செய்யப்படும். தேர்வு குழுவினரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும் அணியை முடிவு செய்வார்கள்.
இவ்வாறு ராஜீவ்சுக்லா கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வீரர்களை அறிவித்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமே இன்னும் வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.