search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2024-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது: பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி
    X

    2024-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது: பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி

    • ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது வழங்கி வருகிறது.
    • ஐசிசி வெளியிட்டுள்ள பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் பும்ரா உள்பட 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டில் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் பும்ரா உள்பட 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணியின் பும்ரா, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆகியோரும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ்-ம் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் தேர்வாகும் ஒருவருக்கு விருது வழங்கப்படும்.

    இந்திய அணியின் பும்ரா இந்த ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14.92 சராசரியில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இதேபோல ஜோ ரூட் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 55.57 சராசரியுடன் 1556 ரன்கள் குவித்துள்ளார். ஹார் ப்ரூக் 12 போட்டிகளில் விளையாடி 55.00 சராசரியுடன் 1100 ரன்கள் குவித்துள்ளார்.

    இலங்கை வீரர் கமிந்து மெண்டீஸ் 9 போட்டிகளில் விளையாடி 74.92 சராசரியுடன் 1049 ரன்கள் எடுத்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளனர்.

    ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ஓமர்சாய், இலங்கை அணியில் குசல் மெண்டீஸ் மற்றும் ஹசரங்கா, வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரூதர்போர்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஐசிசியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஜோரூட், டிராவிஸ் ஹெட், ஹாரி ப்ரூக், பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.


    Next Story
    ×