search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சொந்த மண்ணில் சொதப்பல்: 86 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து
    X

    சொந்த மண்ணில் சொதப்பல்: 86 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து

    • கேன் வில்லியம்சன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • தொடக்க வீரர்களான டாம் லாதம் (17), டேவன் கான்வே (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    நியூசிலாந்து- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் ஹாரி ப்ரூக் (123) சதமும், ஒல்லி போப் (66) அரைசதமும் அடிக்க இங்கிலாந்து 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். தொடங்க வீரர்களான டாம் லாதம் (17), டேவன் கான்வே (11) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    கேன் வில்லியம்சன் தாக்குப்பிடித்து 37 ரன்கள் அடித்தார். ரச்சின் ரவீந்திரா 3 ரன்னிலும், டேரில் மிட்செல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. ஓ'ரூக்கே ரன்ஏதும் எடுக்காமலும், பிளெண்டல் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    Next Story
    ×