என் மலர்
கிரிக்கெட் (Cricket)
விராட் கோலி ஜெர்சி, ரோகித்- டோனி பேட் மூலம் 1.26 கோடி ரூபாய் நிதி திரட்டிய கே.எல். ராகுல்
- விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன் என அறிவிப்பு.
- ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்பவர் கே.எல். ராகுல். இவர் தனது சமூக வலைப்பக்கத்தில் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன். காத்திருங்கள் எனத் தெரிவித்திருந்தார்.
கே.எல். ராகுலுக்கு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பின் நடைபெற்ற இலங்கை தொடரில் அவர் விளையாடவில்லை. இதனால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாகப் பரவியது.
இந்த நிலையில் மனநிலை குன்றிய குழைந்தைகளின் வாழ்க்கை மேம்படுவதற்காக நானும் எனது மனைவி அதியா ஷெட்டி ஆகியோர் இணைந்து வீரர்களின் கிரிக்கெட் பொருட்களை ஏலம் விடுவதற்கான ஒரு ஏலம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த ஏலத்தில் விராட் கோலியின் ஜெர்சி 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோலியின் கையுறை (gloves) 28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். டோனி ஆகியோர் பேட் முறையே 24 லட்சம் ரூபாய்க்கும், 13 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது. ராகுல் டிராவிட்டின் பேட் 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மூலம் 1.26 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இதன்மூலம் ஓய்வு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.