என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![ஈ சாலா கப் நம்தே.. ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம் ஈ சாலா கப் நம்தே.. ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9261350-ag.webp)
ஈ சாலா கப் நம்தே.. ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த சில சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக டூ பிளெஸ்சிஸ் வழிநடத்தி வந்தார்.
- மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
பெங்களூரு:
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது.
சில சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்ட டூ பிளெஸ்சிசை கழற்றி விட்டது. அவரை நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
எனவே விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி வந்தது.
Welcome to your Raj, Ra-pa. ?The baton has been passed, and your name has made it to the history books. It's time for a new chapter! Let's give the best fans in the world what they've been waiting for all these years. ? #PlayBold #ನಮ್ಮRCB #RCBCaptain #Rajat #RajatPatidar… pic.twitter.com/AKwjM9bnsq
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.