என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ரஞ்சி போட்டி: இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்
- ரஞ்சி போட்டியில் மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடினார்
- பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த தொடர் என கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி ஒரு போட்டியை சமன் செய்தது.
எட்டு போட்டிகளிலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.
இதனையடுத்து ரஞ்சி போட்டியில் மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இன்றைய ரஞ்சி போட்டியில் ஜம்மு-காஷ்மீர் - மும்பை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் ரோகித் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதேபோல் பஞ்சாப் மற்றும் கர்நாடக அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மேலும் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய ரிஷப் பண்ட 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ரஞ்சியில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.