search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரஞ்சி கோப்பையில் சொதப்பும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் பிரகாசமாக மின்னிய ஜடேஜா
    X

    ரஞ்சி கோப்பையில் சொதப்பும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் பிரகாசமாக மின்னிய ஜடேஜா

    • சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ஜடேஜா பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • அதில் ரிஷப் பண்ட் விக்கெட்டும் அடங்கும்.

    கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடர் என கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி ஒரு போட்டியை சமன் செய்தது.

    எட்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. குறிப்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.

    இதனையடுத்து ரஞ்சி போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். மும்பை அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா 3 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல் பஞ்சாப் மற்றும் கர்நாடக அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    மேலும் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய ரிஷப் பண்ட 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ரஞ்சியில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளனர். இதனால் அவர்கள் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பி வரும் நிலையில் சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ஜடேஜா பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அதில் ரிஷப் பண்ட் விக்கெட்டும் அடங்கும். மேலும் பேட்டிங்கிலும் அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 36 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும்.

    முன்னணி பேட்ஸ்மேன்கள் 10 ரன்கள் கூட எடுக்க முடியாத நிலையில் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    Next Story
    ×