என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை 3-1 என ஆஸ்திரேலியா வெல்லும்: பாண்டிங் கணிப்பு
- பார்டர் கவாஸ்கர் டிராபி இந்த ஆண்டின் இறுதியில் தொடங்குகிறது.
- இதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.
சிட்னி:
ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இதற்கிடையே, இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில், இது 5 போட்டிகள் கொண்ட தொடராக உள்ளது. கடந்த இரண்டு முறை 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் என்பதால் எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் ஒருபோதும் முனையப் போவதில்லை. எங்காவது டிரா இருக்கும். மோசமான வானிலை இருக்கும். எனவே, இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வெல்லும் என தெரிவித்தார்.