என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![சாம்பியன்ஸ் டிராபி: கேல் ராகுலா.. ரிஷப் பண்டா.. விக்கெட் கீப்பர் குறித்து கம்பீர் ஓபன் டாக் சாம்பியன்ஸ் டிராபி: கேல் ராகுலா.. ரிஷப் பண்டா.. விக்கெட் கீப்பர் குறித்து கம்பீர் ஓபன் டாக்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9267146-gambhir.webp)
சாம்பியன்ஸ் டிராபி: கேல் ராகுலா.. ரிஷப் பண்டா.. விக்கெட் கீப்பர் குறித்து கம்பீர் ஓபன் டாக்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கே.எல். ராகுல் தான் எங்கள் முதன்மை விக்கெட் கீப்பர்.
- இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் சேர்க்க முடியாது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. இந்த 3 போட்டிகளிலும் ரிஷப் பண்ட் அணியில் இடம் பெறவில்லை. கேஎல் ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இதனால் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பண்ட் களமிறங்குவாரா அல்லது கேஎல் ராகுல் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்நிலையில் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் சேர்க்க முடியாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கே.எல். ராகுல் தான் எங்கள் முதன்மை விக்கெட் கீப்பர். ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் தற்போது கே.எல் தான் சிறப்பாக செயல்படுகிறார். இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் சேர்க்க முடியாது.
கே.எல்.ராகுலை 6-வது பேட்ஸ்மேனாக களமிறக்கி, அக்சர் படேலை ஏன் அவருக்கு முன் களமிறக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கம்பீர் கூறியதாவது, முதல் 5 வீரர்களும் வலது கை பேட்ஸ்மேன்களாகதான் இருக்க வேண்டுமா என்ன? எங்களுக்கு புள்ளி விவரங்கள் பெரிதில்லை. யார் சிறப்பாக செயல்படுவார்கள் என அணி நினைக்கிறதோ அவர்கள் களமிறக்கப்படுவார்கள்.
அந்தந்த நேரத்தில் யார் அதிக ரன்கள் அடிக்கிறார்கள் என்றே பார்க்கிறோம். அக்ஸர் 2 போட்டிகளிலும் நன்றாகவே ஆடினார்.
மேலும், விக்கெட் எடுக்கும் வீரர் ஒருவர் அணியில் தேவைப்பட்டது. வருண் சக்கரவர்த்தி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நீண்ட எதிர்காலம் உள்ளது. ஆனால் 15 பேர் கொண்ட அணியில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க இயலாது.
என கவுதம் கம்பீர் கூறினார்.