என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சமூக நலனுக்காக தனது வணிக வருவாயில் இருந்து 10%-ஐ அறக்கட்டளையின் மூலம் உதவ ரிஷப் பண்ட் முடிவு
- 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அறிமுகமானார்.
- பண்ட் தனது வணிக வருவாயில் 10%-ஐ அறக்கட்டளையின் மூலம் சமூக நலனுக்காக வழங்க உறுதியளித்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல வெற்றிகளை பரிசாக வழங்கியுள்ளார். இவர் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் பெற்றுள்ளார். அதற்காக தீவிரமாக பயிற்சியில் ரிஷப் பண்ட் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட்டை அடுத்து மற்றொரு துறையில் பண்ட் கவனம் செலுத்தியுள்ளார். அந்த வகையில் இவர் தனது வணிக வருவாயில் 10%-ஐ அறக்கட்டளையின் மூலம் சமூக நலனுக்காக வழங்க உறுதியளித்துள்ளார்.
2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு இந்திய அணியில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மொத்தம் 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார்.