search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    16 பேர் கொண்ட இந்திய அணி: பி.சி.சி.ஐ. லிஸ்ட்-இல் காணாமல் போன ரோகித் சர்மா பெயர்
    X

    16 பேர் கொண்ட இந்திய அணி: பி.சி.சி.ஐ. லிஸ்ட்-இல் காணாமல் போன ரோகித் சர்மா பெயர்

    • இந்திய அணி கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார்.
    • ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறாமல் உள்ளது.

    ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவர் விலகியதை அடுத்து இந்திய அணி கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார்.

    இன்றைய போட்டியில் டாஸ் முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. இந்தப் பட்டியலில் அனைவரும் அதிசயிக்கும் வகையில், கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறாமல் உள்ளது. இன்றைய போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா அணியின் ஆடும் 11-இல் இடம்பெற வாய்ப்பு இல்லை.

    எனினும், பி.சி.சி.ஐ. வெளியிட்ட 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மா பெயர் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய அணி வீரர்கள் பட்டியலிலேயே ரோகித் சர்மா பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


    முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ்-இன் போது பேசிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, "எங்கள் கேப்டன் ஓய்வு முடிவை எடுத்து இருப்பதன் மூலம் அவர் தலைமைப் பண்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவே அணியில் ஒற்றுமை இருப்பதை உணர்த்துகிறது. இங்கு சுயநலத்திற்கு இடமே இல்லை."

    "அணிக்கு நன்மை பயக்கும் விஷயங்களை செய்து வருகிறோம். இந்தப் போட்டியில் இரு மாற்றங்கள், ரோகித் ஓய்வு எடுக்கிறார், ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகியதால், பிரசித் கிருஷ்ணா அணியில் இணைந்துள்ளார்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்கும் முன் நடைபெற்ற பயிற்சியின் போது, ரோகித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் பேசிக் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகின. மேலும், பயிற்சி முடிந்த பிறகு ரோகித் சர்மா மைதானத்தில் இருந்து வேறொரு வாயில் மூலம் வெளியேறி அணி பேருந்தில் ஏறியதாக கூறப்பட்டது.

    Next Story
    ×