என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சிட்னி டெஸ்ட் தான் கடைசி.. ரோகித் சர்மா ஓய்வு அறிவிப்பு?
- ரோகித் சர்மா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
- மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்தது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். முன்னதாக உள்நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் ரோகித் சர்மா எந்தப் போட்டியிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதன் விளைவாக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதில் மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்தது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியோடு, கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வு பற்றி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.