search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரோகித் சர்மாவுக்கு ஏன் இவ்வளவு பில்டப்: டெஸ்ட்டில் அப்படி எதுவும் செய்யவில்லை- சஞ்சய் மஞ்ரேக்கர்
    X

    ரோகித் சர்மாவுக்கு ஏன் இவ்வளவு பில்டப்: டெஸ்ட்டில் அப்படி எதுவும் செய்யவில்லை- சஞ்சய் மஞ்ரேக்கர்

    • அணியிலிருந்து நீக்கப்பட்டதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சர்மா ஒன்றும் சிறந்த பேட்ஸ்மேன் அல்ல.
    • ஒருவேளை விராட் கோலிக்கு இப்படி செய்திருந்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா செயல்பட்டார். ரோகித் 11 பேர் கொண்ட அணியில் கூட இடம் பெறவில்லை.

    ரோகித் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என பல தகவல்கள் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் அவரது ஓய்வை மறைத்து வைத்து கூறும் அளவுக்கு அவர் பெரிய அளவில் ஏதும் செய்யவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் கேப்டனாக பும்ரா மைதானத்திற்குள் வரும் போது ரவி சாஸ்திரி ரோகித் குறித்து கேட்காதது ஆச்சரியமாக இருந்தது. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஏன் ஏதோ ரகசிய ஆபரேஷனை போல் மறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    இதுதான் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் எனக்கு பிடிக்காத விஷயம். அணியிலிருந்து நீக்கப்பட்டதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சர்மா ஒன்றும் சிறந்த பேட்ஸ்மேன் அல்ல. ஒருவேளை விராட் கோலிக்கு இப்படி செய்திருந்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.

    ஆனால் ரோகித் சர்மா சுமார் 60 டெஸ்ட் போட்டிகள் விளையாடி சேனா (தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஒரேயொரு சதத்தை மட்டுமே விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி வெறும் 40 மட்டும்தான். இதனால் ரோகித் சர்மா நீக்கப்பட்டதை இந்திய அணி மறைக்க தேவையில்லை என்பதே எனது கருத்து.

    என்று சஞ்சய் கூறினார்.

    Next Story
    ×