என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை.. 2025 ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா? சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை.. 2025 ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா?](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9256319-sanju-samson-injury.webp)
X
சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை.. 2025 ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா?
By
மாலை மலர்13 Feb 2025 8:56 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
- சஞ்சு சாம்சனின் காயம் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தின் போது ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து வீச்சில் சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சஞ்சு சாம்சனின் காயம் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டு மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளதால் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X