என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ரோகித் சர்மா அணியில் விளையாட வேண்டுமா என்பதை தேர்வுக்குழு முடிவு செய்யும் - சஞ்சய் மஞ்ரேக்கர்
- சமூக வலைதளங்களில் கமென்ட் செய்தனர்.
- ரோகித் ஓய்வு முடிவு அவரது கையில் தான் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்தது ஏமாற்றம் அளித்தது. இதோடு, டெஸ்ட் தொடர் தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவரது ரசிகர்கள் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதே நல்லது என்றும் சமூக வலைதளங்களில் கமென்ட் செய்தனர்.
இந்த நிலையில், ரோகித் சர்மா ஓய்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் வெளிப்படையாக தெரிகிறது. ஓய்வு அறிவிப்பது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட முடிவுதான். அந்த வகையில் ரோகித் ஓய்வு முடிவு அவரது கையில் தான் உள்ளது."
"ஆனால் இந்திய அணியில் அவர் விளையாட வேண்டுமா? இல்லையா? என்பது தேர்வுக் குழுவினர் கையில் தான் உள்ளது. ஏனெனில் கடைசியாக நடந்த டெஸ்ட் தொடர்களில் அவர் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார். எனவே அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் அவர் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பதை தேர்வுக் குழுவினர்தான் முடிவு செய்வார்கள்," என்று தெரிவித்தார்.