என் மலர்
கிரிக்கெட் (Cricket)
வங்கதேச மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஷகிப் அல் ஹசன்
- தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- யாருடைய கைதட்டல் என்னை சிறப்பாக விளையாட நிர்ப்பந்தித்ததோ அவர்களுடன் நான் கைகுலுக்க விரும்புகிறேன்.
ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். அந்த போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
கலவரத்தின்போது கனடாவில் நடந்த குளோபல் டி20 லீக்கில் ஷகிப் அல் ஹசன் விளையாடி கொண்டிருநதார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை. .
இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தின் போது அமைதி இருந்ததற்காக வங்கதேச மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதலாவதாக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேசிப்பவரின் இழப்பை எந்த தியாகமும் ஈடுசெய்ய முடியாது என்றாலும், எனது மௌனத்தால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு ஒரு குழந்தையையோ அல்லது சகோதரனையோ இழந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இந்த இக்கட்டான காலகட்டத்தில், உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால், நானும் வருத்தப்பட்டிருக்கலாம்.
எனது கடைசி போட்டியில் நான் விரைவில் விளையாடுவேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நான் விடைபெறும் தருனத்தில் நீங்கள் அனைவரும் சுற்றியிருக் விரும்புகிறேன். யாருடைய கைதட்டல் என்னை சிறப்பாக விளையாட நிர்ப்பந்தித்ததோ அவர்களுடன் நான் கைகுலுக்க விரும்புகிறேன். நான் சந்திக்க விரும்புகிறேன்.
நான் நன்றாக விளையாடியபோது மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தவர்களின் கண்களை நான் சந்திக்க விரும்புகிறேன். நான் விளையாடாதபோது அவர்களின் கண்கள் கண்ணீர் வழிந்தன. இந்த விடைபெறும் தருணத்தில் நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உண்மையில், நட்சத்திரம் நான் அல்ல, நீங்கள் அனைவரும்.
என்று கூறினார்.