என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பொய் சொல்லும் ஷ்ரேயாஸ் ஐயர்.. போட்டுடைத்த ஆகாஷ் சோப்ரா - ஐபிஎல் ஏலத்தில் நடந்தது என்ன?
- நடந்து முடிந்த ஐபிஎல் 2025 ஏலத்தில் ஷ்ரேயாஸ் அய்யரை பஞ்சாப் அணி கைப்பற்றியது.
- தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு அணியிலிருந்து உறுதியான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை
பிரபல வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஆகாஷ் சோப்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வெளியேறுவது குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பொய் கூறுவதாக என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 ஏலத்தில் ஷ்ரேயாஸ் அய்யரை பஞ்சாப் அணி கைப்பற்றியது. கேகேஆர் கேப்டனாக வெற்றிகளை பெற்றுத்தந்த ஷ்ரேயாஸ் ஏன் இந்த முறை அவ்வணியில் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு சமீபத்திய நேர்காணலில் பதிலளித்த ஷ்ரேயாஸ் ஐயர், அவரைத் தக்கவைத்துக்கொள்வது தொடர்பாக கேகேஆர் முயற்சி எடுக்காததால் குழப்பம் மற்றும் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார்.
தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு அணியிலிருந்து உறுதியான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இது இறுதியில் பரஸ்பர பிரிவிற்கு வழிவகுத்தது என்று கூறினார்.
தற்போது இதற்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா, கேகேஆர் மற்றும் ஷ்ரேயாஸ் இடையே தக்கவைப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் யார் உண்மை கூறுவது, யார் பொய் கூறுவது என்ற குழப்பம் எழுந்துள்ளது.