search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நானும் கே.எல். ராகுலும்... சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் சொல்வது என்ன?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நானும் கே.எல். ராகுலும்... சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் சொல்வது என்ன?

    • 2023 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டர் வரிசையில் நானும் கே.எல். ராகுலும் இணைந்து சிறப்பாக விளையாடினோம்.
    • இறுதிப் பேட்டியில் மட்டும் நாங்கள் விரும்பிய வழியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

    அதற்கு முன்னதாக வரை இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அசத்தினர்.

    அந்த மிகப்பெரிய ஒருநாள் திருவிழாவிற்குப் பிறகு அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி நடக்கிறது.

    இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் எனத் தெரியவில்லை.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

    2023 உலகக் கோப்பையில் நானும், கே.எல். ராகுலும் மிடில் ஆர்டர் என்ற முக்கியமான ரோலில் விளையாடினோம். நாங்கள் இருவரும் இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இறுதிப் போட்டியில் மட்டும் நாங்கள் விரும்பிய வழியில் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்பட்டால், இது பெருமைக்குரிய தருணமாக இருக்கும்.

    இவ்வாறு ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×