search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மந்தனா, பிரதிகா ராவல் அதிரடி சதம்- ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை
    X

    மந்தனா, பிரதிகா ராவல் அதிரடி சதம்- ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை

    • ஸ்மிருதி மந்தனா 80 பந்தில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய மந்தனா அவ்வபோது சிக்சர்களை பறக்கவிட்டார்.அவர் 80 பந்தில் 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இதில் 12 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும்.

    தொடர்ந்து விளையாடிய பிரதிகா ராவலும் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிச்சா ஹோஷ் (59) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.

    Next Story
    ×