search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இலங்கையை ஒயிட்வாஷ் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடம் பிடித்த தெ. ஆப்பிரிக்கா
    X

    இலங்கையை ஒயிட்வாஷ் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடம் பிடித்த தெ. ஆப்பிரிக்கா

    • 63.330 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
    • இந்திய அணி 57.290 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களும் இலங்கை 328 ரன்களும் சேர்த்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கைக்கு 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.

    இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி தற்போது தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.

    63.330 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 2-வது 3-வது இடங்கள் முறையே ஆஸ்திரேலியா 60.710 புள்ளிகளுடன் இந்திய அணி 57.290 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை அணி 45.45 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும்.

    Next Story
    ×