என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தானின் கனவு கலைந்தது- அரையிறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா

- தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
- இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது.
லாகூர்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அனி திணறியது. இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் 2-வது அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கூறப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது.