search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடினமாக உழைக்கிறார்- ரோகித் சர்மாவுக்கு சூர்யகுமார் யாதவ் புகழாரம்
    X

    கடினமாக உழைக்கிறார்- ரோகித் சர்மாவுக்கு சூர்யகுமார் யாதவ் புகழாரம்

    • ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
    • ஒருவர் 15 முதல் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது பெரிய விஷயம்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை யாரும் படைத்திராத சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. நடத்தும் நான்கு வகை கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இதையடுத்து, எம்.எஸ். தோனி இதுவரை எட்டாத சாதனையை ரோகித் சர்மா தற்போது படைத்துள்ளார்.

    கடந்த மூன்று ஆண்டுகளில் ஐ.சி.சி. நடத்திய அனைத்து வித கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இத்தகைய சாதனையை படைத்த முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த கேப்டனும் பெறாத பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    இந்நிலையில் ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார் என ரோகித் சர்மாவுக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா அழைத்து சென்றுள்ளார். இது மிகப்பெரியது. ஒருவர் 15 முதல் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது பெரிய விஷயம்.

    அவர் கடினமாக உழைக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடும் அவருக்கு என் வாழ்த்துகள்.

    என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    Next Story
    ×