என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற நைஜீரியா
- மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.
இதில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை நைஜீரியா அணி எதிர்கொண்டது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து 66 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி நைஜீரியா அணி தனது முதல் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் சி பிரிவில் முதலிடம் பிடித்து நைஜீரியா அணி அசத்தியுள்ளது.